அடி பாதம்
உங்களின் அடி பாதத்தின் நடு மையத்தில் 2 நிமிடம் அழுத்தி பிடித்திருந்தால் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து கொள்ளலாம். மேலும் பசியின்மை, சோம்பேறி தனம், ஆகியவற்றை குணப்படுத்த முடியுமாம்.
கையின் உட்பகுதி
கையின் உட்பகுதியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் இதயம், நுரையீரல், தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.
கட்டை விரல்
தலை, மூளை, கண்கள் போன்ற உறுப்புகளிலும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கட்டைவிரலை நன்கு அழுத்தி 2 நிமிடம் வரை பிடித்து கொண்டால் மிக விரைவில் இதன் பிரச்சினைகளை குணப்படுத்தி விடுமாம்.
கழுத்து பகுதி
கழுத்து பகுதியில் ஆமணக்கு எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு மசாஜ் உடன் அழுத்தத்தையும் சேர்ந்து கொடுத்தால் எளிதில் கழுத்து வலி குணம் அடையும்.
கால் கீழ்பகுதி
கால் கீழ்பகுதியின் பின்புறத்தில் உள்ள புள்ளியை 2 முதல் 5 நிமிடம் அழுத்தம் தந்தால் எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்குமாம்.
பின்னந்தலை
பின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளை கொண்டு அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான தூக்கமும் வரும்.
தொப்புள் புள்ளி
மலச்சிக்கல் பிரச்சினையிலும், செரிமான கோளாறுகளிலும் இருந்து தப்பிக்க, தொப்புளின் 3 cm கீழ் பகுதியில் அழுத்தம் தந்தால் இதற்கு தீர்வு கிடைத்து விடும்.
நடுவிரல்
உங்களின் நடுவிரலை 5 நிமிடம் இழுத்து பிடித்திருந்தால் உங்களின் பயம், தயக்கம், நடுக்கம் ஆகியவற்றை இந்த புள்ளி சரி செய்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலின் மேற்பகுதி
காலின் பெரு விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் தலை வலி, பாத வலி போன்ற பல வலிகளில் இருந்து விரைவில் குணமடையலாம்.