கிராம்பு
கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணையை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம். இது, பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோ என்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.
உப்புக் கரைசல்
பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம். இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேயிலை ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.
மசாஜ்
பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும். இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக்கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.
பச்சைக் காய்கறிகள்
பச்சைக் காய்கறிகளை நன்கு மென்று திண்பதன் மூலம் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும். ஆகையால், தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.
வாய் கொப்பளித்தல்
சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
கொழுப்புச்சத்து மிகுந்த, காரசாரமிக்க, கனமான உணவுப் பதார்த்தங்கள் பல் இடுக்குகளில் படிந்து, நுண்ணுயிர்களுக்கு உணவு வழங்கி ஈறுகளில் இரத்தத்தை கசியச்செய்யும் எனவே இவ்வகை உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.
வாயை பாக்டீரியாக்கள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனில்,
புகைப்பிடிப்பதைத் தவிருங்கள்.
பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.