இஞ்சி சாறு
குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் பிரச்சனைக்கு மூன்று சொட்டு இஞ்சிச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொடுத்தால் குணமாகும்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையை சிறிது உப்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்கி, அதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
துளசி சாறு
துளசிச் சாறு மற்றும் கல்கண்டையும் ஒன்றாக சேர்த்து சர்பத் போலக் காய்ச்சி அதில் சிறிதளவு எடுத்து 3 முறைகள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் பலமுறை குடித்து வர தொல்லைத் தரும் வறட்டு இருமல் குணமாகும்.
மிளகு
1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
வெங்காயம்
வறட்டு இருமலுக்கு 1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொண்டால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.