ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அது உயிருக்கே ஆபத்தாகும்.
அத்தகைய சில உணவுகள் இதோ,
வாழைப்பழம்
வாழைப்பழம் அமிலத் தன்மை மற்றும் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ளது.
எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அல்சர் போன்ற குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட சிலமணி நேரத்திலே நம் உடலில் உள்ள எனர்ஜியை குறைத்து பலவீனம் மற்றும் சோர்வான உணர்வுகளை ஏற்படுத்திவிடும்.
தயிர்
தயிர் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
ஏனெனில் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்சனையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு மற்றும் இருமல் ஆகிய பிரச்சனையை ஏற்படுத்தும்.
க்ரீன் டீ
பலரும் உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை குடிப்பார்கள். ஆனால் அத்தகையை க்ரீன் டீயை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
ஏனெனில் அதில் உள்ள காஃபைன் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
சாதம்
சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது.
ஆனால் சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அதில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, உடல் எடையை அதிகரித்து, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களை வரவழைக்கும்.
பால்
பாலில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற அனைத்து சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.
ஆனால் பாலை இரவு உறங்கும் முன் குடித்தால் நல்ல உறக்கம் வரும். ஆனால் பகலில் குடித்தால் மந்தமான உணர்வை உண்டாக்கும்.
ஆப்பிள்
ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது.
ஏனெனில் ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உறக்கத்தை கெடுப்பதுடன், வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் அதிகமான கோகோ பொருட்கள் உள்ளது.
எனவே இரவில் சாப்பிட்டால் அது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சுயநினைவை இழக்கச் செய்துவிடும்.
காஃபி
இரவு நேரத்தில் காஃபியை அதிகமாகக் குடிக்கக் கூடாது.
ஏனெனில் அதில் உள்ள காஃபைன் செரிமானக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி இரவு முழுவது அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி விடும்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் மற்றும் விட்டன் D உள்ளது.
ஆனால் இந்த ஆரஞ்சு பழத்தின் ஜூஸினை இரவு நேரத்தில் குடிக்கக் கூடாது. அதனால் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து எரிச்சலை உண்டாக்கும்.
சர்க்கரை
சர்க்கரையை காலை உணவில் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இரவு உறங்கும் முன் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை தேங்கக் செய்து, இதய நோய் முதல் பல நோய்களை ஏற்படுத்தும்.