செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பெண்களைப் போல் ஆண்களுக்கும் பி.சி.ஓ.எஸ். பாதிப்பு ஏற்படுமா?

பெண்களைப் போல் ஆண்களுக்கும் பி.சி.ஓ.எஸ். பாதிப்பு ஏற்படுமா?

1 minutes read

18 வயது முதல் 44 வயது வரையுள்ள 20 சதவீத பெண்கள் பிசிஓஎஸ் எனப்படும் பொலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்களைப் போல் ஆண்களும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

பிசிஓஎஸ் என்பது எம்முடைய உடலில் உள்ள மரபணு, ஹோர்மோன், வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் இடையூறுகளை உண்டாக்கும். இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலில் கோளாறுகள் என பல்வேறு பாதிப்புகளை உடல்ரீதியாக ஏற்படுத்தி, மன நலனுக்கும் கேடு விளைவிக்கிறது.

பெண்களைப் போல் ஆண்களுக்கும் பிசிஓஎஸ் பிரச்சனை உண்டு. ஆண்களை பொறுத்தவரை அவர்களுடைய உடலில் இன்சுலின் என்ற ஹோர்மோனின் சுரப்பு, கட்டுப்பாட்டை கடந்து சுரந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண்களின் ரத்த சர்க்கரையின் அளவு இயல்பாக இருந்தாலும், அவர்களிடத்தில் இன்சுலின் சுரப்பு எதிர்ப்பு ,ஹோர்மோன்களின் கட்டுப்பாடற்ற தன்மை இத்தகைய பாதிப்பிற்கு காரணமாகிறது.

அத்துடன் சுற்றுச் சூழல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை தெரிவின் காரணமாகவே மரபணுவில் மாற்றம் ஏற்படுகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்களின் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் விரைப்புத் தன்மை குறித்த மாற்றங்கள், செக்ஸ் ஹோர்மோன் பைண்டிங் குளோபுலின் எனப்படும் பிரத்தியேக ஹோர்மோன் சுரப்பில் சமச்சீரற்ற தன்மை ஆகியவை ஏற்படும். வேறு சிலருக்கு அவர்களுடைய புரோஸ்டேட் சுரப்பியில் குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் வெளியேறுவதில் குறைபாடு போன்றவை உண்டாகும். இவைகள் இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக பிசிஓஎஸ் பிரச்சனை பெண்களுக்கு இருப்பது போல், ஆண்களுக்கும் வேறு வடிவில் இருப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அனுஷா 

டொக்டர் நல்ல பெருமாள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More