விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரலை உள்ளங்கையின் மத்தியில் வைத்து மற்ற நான்கு விரல்களையும் படத்தில் உள்ளதுபோல் மடக்கி வைக்கவும்.
இரு கைகளிலும் செய்யவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறை செய்யவும். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
பலன்கள்: உடலில் உயிரோட்டம் நன்கு இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் அதிகமாகும். உடல் முழுக்க பிராண ஆற்றல் பெருகும்.
மேற்குறிப்பிட்ட முத்திரை பயிற்சிகள் செய்ய அரை மணி நேரமாகும். இந்த அரை மணி நேரம்தான் உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும், உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தருகின்றது. இதனை வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்துடன் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள்.
பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் காலத்தில் முதல் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். ஐந்தாவது நாளில் இருந்து பயிற்சி செய்யலாம்.
நன்றி-மாலை மலர்