இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.
சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.
பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
கருப்பை நீர்கட்டி அறிகுறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil):
பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.
கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.
இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.
இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.
இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.
இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.
நீர்க்கட்டி வர காரணம்:
இந்நோய்க்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.
மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
நன்றி-மாலை மலர்