சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு வயிற்றின் அடிப்பகுதியில் சிசேரியன் செய்யப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டிருக்கும். அந்த தையல் டிசார்ஜ் ஆவதற்குள் பிரித்து விடுவார்கள்.
வீட்டிற்கு வந்ததும் அந்த புண் ஆறுகிற வரையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த சில நாட்கள் வரை உதிரப் போக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக உதிரப் போக்கு குறைந்து நின்று விடும்.
ஆனால் ஓய்வு இல்லாமல் கடினமாக ஏதேனும் வேலை செய்தால் உதிரப் போக்கு அதிகரிக்கும். அதனால் ஒரு வாரமாவது போதிய ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.
சிசேரியனுக்குப் பிறகு விரைவில் குணமடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
சிசேரியனுக்குப் பிறகு சில நாட்கள் வரை காய்ச்சல், உடல் வலி ஆகியவை இருக்கும். அப்படி இருக்கும்போது உங்களுடைய மகப்பேறு மருததுவரை அணுகி போதிய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும் மனதளவிலும் உடலளவிலும் குணமடைய கொஞ்சம் காலம் பிடிக்கும்.
அந்த புண்கள் மற்றும் பிறப்புறுப்புப் பாதை ரணங்கள் முழுமையாக சரியாகும் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.