செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அமர்ந்து சாப்பிடுவதால் நன்மை

அமர்ந்து சாப்பிடுவதால் நன்மை

1 minutes read

உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
உட்கார்ந்து சாப்பிடுவதே ஆரோக்கியமான உணவு எனப்படும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும், அதேசமயம் அதிகமாக சாப்பிடுதல், தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் வராது. உட்கார்ந்து சாப்பிடும்போது உங்கள் வயிறு நிறைந்தவுடன் தானாக உங்கள் மூளை வயிறுக்கு சிக்னல் அனுப்பிவிடும்.

எடை குறைப்பு
தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் மூளை விரைவிலேயே வயிறு நிறைந்து விட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட தேவையில்லை.மேலும் நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உங்கள் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது
நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்களுடைய கீழ் முதுகு, இடுப்பு, வயிறு என அனைத்தும் நேராக இருக்கும். இது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும். இது உங்களின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செய்லபட வைக்கும்.

இதய ஆரோக்கியம்
உங்கள் கால்கள் உங்கள் இதயத்திற்கு கீழ் நோக்கி இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாய் இருக்கும். அதே நேரம் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்

நன்றி : ஆழோக்கிய வாழ்வு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More