எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்கள் நச்சுத் தன்மையை நீக்குவதில் மிக வீரியமாகச் செயலாற்றக் கூடியது.
அவற்றிலுள்ள வைட்டமின் சி உடலுக்குத் தீமை செய்யும் ஃப்ரீ – ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதிலுள்ள ஆல்கலைன் பண்புகள் உடலின் பி.எச் அளவைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கு தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீருடன் அந்த நாளைத் தொடங்குங்கள். அதேபோல மற்ற ஃபிரஷ்ஷான பழங்களையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW