படிப்படியாக தியானம் செய்ய செய்ய மறைமுக எண்ணம் மறையும். இதயம் சரியான அளவில் துடிக்கும். இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
காலை எழுந்ததும், காலை கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்துவிட்டு கிழக்கு முகமாக ஒரு விரிப்பு விரித்து அதில் அமரவும். சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
பின் உங்களது மனதை, மூச்சோட்டத்தை இதயத்தில் நிலை நிறுத்தி தியானிக்கவும். இது அனாகத சக்கரமாகும். நல்ல பிராண சக்தி இந்த மையம் முழுக்க கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் இந்த தியான பயிற்சியை செய்யவும். மதியம் செய்ய முடியாதவர்கள் காலை, மாலை சாப்பிடும்முன் இந்த தியானப் பயிற்சியை செய்யவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் செய்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்ய முடியும்.
பலன்கள்:
ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கப்படுகின்றது.மன அழுத்தம் இல்லாமல் வாழலாம், மன அமைதி கிடைக்கும். நேர்முகமான எண்ணங்களே உயர்ந்து நிற்கும். எதிர்மறை எண்ணங்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். படிப்படியாக தியானம் செய்ய செய்ய மறைமுக எண்ணம் மறையும். ஒற்றை தலைவலி வராது. இதயம் சரியான அளவில் துடிக்கும். இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
நரம்பு மண்டலங்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும். நரம்பு பலவீனம், உடல் நடுக்கம், கை விரல்கள் நடுக்கம், கழுத்து வலி, மூட்டு வலி வராமல் வாழலாம்.