நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும்.
தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடது நாசியில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.
பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.
இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்பொழுது உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து அமைதியாக தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.
நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும். மன அமைதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வலது மூளை நன்கு இயங்கும். பிட்யூட்டரி – பினியல் சுரப்பி நன்கு சரியான அளவில் சுரக்கும். தலைவலி வராமல் வாழலாம்.
தலைவலி வருபவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் பயிற்சி செய்யுங்கள். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல் தலைவலி வராமல் வாழலாம்.
நன்றி | மாலை மலர்