தியானம் அனைத்துமே நம்மை அமைதிப்படுத்த உதவுகிறது, இறுதியான இலக்கு இதுவல்ல.
நேர்மறை நிலைகளைக் கட்டமைப்பதற்கான உண்மையான திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னர், நம்முடைய மனஅழுத்தத்தை போக்குவதும் அவசியம்
ஆகவே இரண்டு விதமான தியானங்களான விவேகம் மற்றும் உறுதிப்படுத்தலுக்கு இடையில் மாறிச்செல்வதற்கு முன் நம் மனதை அமைதிப்படுத்தி சுவாசத்தில் கவனம் கொள்கிறோம்.
பெரும்பாலும் “பகுப்பாய்வு” என்று சொல்லப்படும், விவேகத்துடன் கூடிய தியானத்துடன், அன்பு உள்ளிட்ட நேர்மறை மன நிலையை படிப்படியாக அடைய நம்மை நாமே சீர்தூக்க சில காரணங்களை செயல்படுத்துகிறோம்.
அல்லது ஒரு சூழ்நிலையைப் பகுப்பாய காரணங்களை பயன்படுத்துகிறோம், இதன் மூலம் நிலையாமை போன்றவற்றில் இருந்து சரியான புரிதலுக்கு வருகிறோம்.
அல்லது நாம் நம் மனநிலையை புத்தர் போன்ற நிலையில் நேர்மறைத் தகுதிகளுடன் எளிமையாக கட்டமைக்கிறோம், அதனை தெளிவாக விவேகத்துடன் செய்யவும் முயல்கிறோம்.
பின்னர், நிலையாக தியானம் மூலம், நாம் உருவாக்கி வைத்திருக்கும் நேர்மறை நிலைகளான மனநிறைவு, கவனம் மற்றும் ஒருமுகப்படுத்துதலை முடிந்தவரை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க பயன்படுத்துவோம்.
அல்லது இந்த முறைகளை தேவையில்லாமல் மனதில் கட்டமைக்கப்பட்டிருப்பவை மீது கவனம் செலுத்துவதில் இருந்து தவிர்க்க செயல்படுத்தலாம்.
இரண்டு முறையிலான தியானத்தையும் நாம் மாற்றி மாற்றி முயற்சிக்கலாம். நாம் அதனை கட்டமைத்து,
நாம் இடைய நினைக்கும் நேர்மறை மனநிலையை காண முடிந்தால், நாம் அதில் நிலைத்திருக்கிறோம். மேலும் நமது ஒருமுகப்படுத்துதல் இந்த நிலையில் வலுவிழந்தாலோ அல்லது தவறிவிட்டாலோ,
மீண்டும் அதனை ஒருவாக்க முயற்சிப்பதோடு, அதிக விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
தியானத்தின் முழு மையப்புள்ளியே நம்முடைய வீட்டில் மெத்தை மீது அமர்ந்து கொண்டு அமைதி,
கவனம் மற்றும் அன்பை உணர்தல் அல்ல, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
நாம் தினசரி தியானித்தால், அவை நேர்மறை உணர்வுகளை ஒரு பழக்கமாக்கும், அதனை நாம் இரவு அல்லது பகல் என நமக்குத் தேவைப்படும் சமயத்தில் செயல்படுத்தலாம். கடைசியில்,
அது நம்மில் ஒரு பாகமாகி விடும் –இயற்கையான ஒன்று நம்முடன் எப்போதும் இருக்கும் எளிமையான அதே சமயம் அதிக அன்பு, கவனம் மற்றும் அமைதி நிலவும்.
நன்றி ஆரோக்கியமலர்