கண் பார்வை திறனை கணினிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் கேள்வியாக இருக்கிறது.
கணினி முன்பு அமர்ந்திருக்கும்போது கண்களின் கவனம் முழுவதும் திரை மீதுதான் படிந்திருக்கும்.
அப்படி நிலையாக கவனம் குவியும்போது திரையில் பார்க்கும், செயல்படுத்தும் விஷயங்கள் எல்லாம் மூளைக்கு தகவல்களாக பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இந்த செயல்முறைக்கு கண் தசைகளின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும்.
மேலும் கண்களின் கவனம் திரையில் படர்வதன் காரணமாக கண் சிமிட்டும் செயல்முறையும் குறைந்து போய்விடும்.
திரையில் அதிக ஒளி வெளிப்படும்போது கண்கள் கூசுதல், மங்கலான பார்வை போன்ற பாதிப்புகளும் உண்டாகக்கூடும்.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
தலைவலி, கண்களில் அழுத்தம், கண் வறட்சி அடைதல், கண்களில் எரிச்சல், அரிப்பு ஏற்படுதல், கண்கள் சிவப்பு நிறத்திற்கு மாறுதல், கண் சோர்வு, இரட்டை பார்வை, கழுத்துவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
நன்றி ஆரோக்கிய மலர்