மன அழுத்தம் நீங்கும். கவலை நீங்கும். அதனால் நுரையீரல் சக்தி பெற்று இயங்கும்.
நிமிர்ந்து விரிப்பில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து செய்யலாம்.
இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கண்களை மூடி கவனிக்கவும்.
பின் கண்களை திறந்து இடது கை கீழ் அதன்மேல் வலது கை வைத்து இரண்டு கட்டை விரல்களும் ஒன்றையன்று தொடுமாறு வைக்கவும்.
படத்தைப் பார்க்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
பின் சாதாரண நிலைக்கு வரவும்.ஒவ்வொரு மனிதனும் தனது நுரையீரலை பாதுகாக்க காலை, மாலை இரு வேளை இந்த முத்திரைகளை செய்து வளமாக வாழுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் நுரையீரல் இயக்கம் நன்றாக இருந்தால் தான் எந்த ஒரு வைரசும் தாக்காமல் நாம் வளமாக வாழ முடியும்.
நுரையீரல் தான் அசுத்த காற்றை வெளியேற்றவும், உடலுக்குத் தேவையான பிராண சக்தியை அளிக்கவும் பயன்படுகின்றது.
நிறைய நபர்கள் தொற்றுநோய் காலத்தில் பிராணன் (ஆக்சிஜன்) இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார்கள்.
எனவே ஒவ்வொரு மனிதனும் நுரையீரல் நன்கு இயங்கச் செய்யும் முத்திரையை பயில்வது அவசியமாகும்.