750 கிராம் ஓரிலைத் தாமரை, 750 கிராம் தேன், 250 கிராம் சிறிய வெங்காயம், 250 கிராம் கசகசா ஆகிய இந்த நான்கு பொருட்களையும் மண்சட்டியிலிட்டு அதில் 100 மில்லி பசும்பாலை ஊற்றி வைக்க வேண்டும்.
பின்பு இந்தச் சட்டியை அடுப்பின் மீது வைத்து லேசான தீயால் எரிக்க வேண்டும். பதமான பிள் இறக்கி வைத்து ஆறினவுடன் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும்.
காலையும், மாலையும் இருவேளை உணவிற்கு முன்னர் மூன்று தேக்கரண்டி அளவு வீதம் இந்த லேகியத்தை எடுத்து உண்ண வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து அருந்திவர நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு பலப்படும்.
நன்றி தினசரி