நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து.
சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது.
விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன.
இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.