செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

1 minutes read

முடக்கத்­தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையா­கும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

இதற்கு முடர்குற்றான், முடக்கறுத்தான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்ட­தாகும்.

முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாச்சத்து, தாது சத்து, காபோவைத்ரேட், நார்ச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்து­களும் சரியான அளவில் அடங்கியுள்ளது.

முடக்கத்தான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டி­வந்தால் மாத விலக்கு பிரச்­சினை சரியாகும் மற்றும் அடிவயிற்று வலி குறையும். மலமிளக்கியாக செயல்­படும்.

முடக்கத்தான் கொடி மலமிளக்கி செயல்­படும் தன்மை­யுடையது.

முடக்கத்தான் கொடியை குடிநீரில் இட்டு அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்து வர கெட்டி­யாக உள்ள மலம் இளகி மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கத்தான் இலையை ரசம் போல வைத்துச் சாப்­பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலச் சிக்கல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

நன்றி | வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More