சைவ உணவுகள் உடலுக்கு நல்ல ஒன்றே ஆகும் ஆயினும் இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது; உடலுக்கு தேவையான மிக முக்கியமான விட்டமினை அசைவ உணவுகளே கொண்டுள்ளது என்றால் நம்புவீர்களா
பல ஆராச்சியின் விளைவின் படி அசைவம், சைவம் இரண்டும் நமது உடலுக்கு தேவையான ஒன்று ஆகும். ஏன் என்றால் அசைவ உணவுகளில் அதீத b12 அடங்கி உள்ளது என்பதே உண்மை
பி 12 நீரில் கரையக்கூடிய விட்டமின் ஆகும். ஆனால் விட்டமின் பி 12 ஐ நமது உடலால் இயற்கையாக தயாரிக்க முடியாது. இந்த விட்டமின் மூளை ஆரோக்கியம், நரம்பு திசு ஆரோக்கியம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு விட்டமின் பி 12 முக்கிய பங்களிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களின் ஆற்றல் உற்பத்தியிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. விட்டமின் பி 12 ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவி செய்வதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.
உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மூளை பாதிப்பை தடுக்கிறது.
மனசோர்வை தடுக்கிறது.
கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.