0
டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3, DEN 4)
- டெங்கு காய்ச்சல் – டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள் ( முரசுகளிலிருந்து, மூக்கிலுருந்து, சளி மற்றும் தோல் என்பவற்றிலிருந்து).
- டெங்கு குருதிப்பெருக்கு – டெங்கு குருதிப்பெருக்கு, டெங்கு தொற்றின் உச்சக் கட்ட நோய் நிலைமை ஆவதுடன் மிகவும் சிறிய எண்ணிக்கையான நோயாளர்களுக்கு இந் நிலைமை ஏற்படுகிறது. டெங்கு குருதிப்பெருக்கு நோயின் போது பெரும்பாலும் தெளிவாக வித்தியாசப்படுத்தி இனங் காண முடியுமான 3 கட்டங்கள் காணப்படுவதுடன் அவை, காய்ச்சலுடன் கூடிய கட்டம் (இக் கட்டத்தின் போது 7 தினங்களுக்கு குறைவாகக் காணப்படும் கடுமையான காய்ச்சலுடனான காலம்), நெருக்கடியான கட்டம் (நெருக்கடியான கட்டம் ஆரம்பமாவது திரவவிழையம் கசிய ஆரம்பித்தல் மற்றும் சதாதாரணமாக காய்ச்சல் தணிந்து செல்லலுடனேயாகும்) இந் நிலைமை 1-2 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் ஏற்கனவே இனங் கண்டு தேவையான அக்கறை செலுத்தப்படாமையால் நோயாளி அதிர்ச்சி நிலைமைக்கு கூட ஆளாகலாம். குணமடையும் கட்டம், 2-5 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் இக் கால கட்டத்தில் நோயாளியின் உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும், இதயத் துடிப்பு குறைவடையும். குணமடையும் சந்தர்ப்பத்திற்கே உரித்தான கொப்புளங்கள் (சிவப்பு நிற பின்னணியில் வௌ்ளை நிற கொப்புளங்கள்) பெரும்பாலும் உடல்பூராக அரிப்புணர்ச்சி காணப்படும். (உள்ளங்கையிலும் அடியிலும் அதிகமாகக் காணப்படும்) இவ் வேளையில் அதிகமாக சிறுநீர் கழிக்கவேண்டியேற்படும்.
national dengue control unit