5
நமது உடலில் மூன்று விதமாக நோய்கள் பிரிக்கப்படுகின்றன, அவை வாதம், பித்தம், கபம் ஆகும் அதில் வாதம் சார்ந்த நோய் காற்றால் அதாவது வாயுவால் உருவாக்கப்படும். வாயு தொல்லையால் உருவெடுக்கும் பிரச்சனை இறப்பை அலர்ஜி (gastristis ) வாயுவால் இறப்பை சார் பகுதிகளில் ஏற்படும் நாள் பட்ட புண் வகைகள் இவற்றின் முதல் அறிகுறி ஏப்பம் காரம் ,புளிப்பாக வெளியேறும் , தொண்டை வலி எந்த சளி தொல்லையும் உள்ளது தொண்டை வலி இருக்கும். இவ்வகை நோய் நிலைமை ஏற்பட முதல் எமது உணவு பழக்கவழக்கமே காரணம் அது உணவுகளை உரிய நேரத்தில் எடுக்காமை,இரண்டு மிகவும் காய்ந்த உணவுகளை எடுத்தல் ( நீரற்ற உணவுகள் ),மூன்று பாண் வகை உணவுகள் , நான்கு அசிட் வகை உணவு (மதுபான வகை ) முதலிடம் பெறும்,சமைக்காத உணவு , பயணம் செய்துகொண்டே உணவு எடுத்தல் ,போன் பாவித்து கொண்டே உணவை சாப்பிடுதழும் காரணம் ஆகும். அடுத்த காரணம் மனநிலை மன குழப்பம் ,இரவில் அதிக நேரம் முழித்திருத்தல் , தூக்கமின்மை போன்றன முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சனை உள்ள நபர்கள் முற்றிலும்தவிர்க்கவேண்டிய உணவுகள் உளுந்து உருளை கிழங்கு கத்திரிக்காய் போன்ற காஸ் உற்பத்தியாக்கும் உணவுகளை தவிர்க்கலாம். எடுக்க வேண்டிய உணவுகள் நிறைய நீர் தன்மையான உணவுகளை உண்ணுதல் , பாசிப்பயறு மிக நன்மையானது பருப்புக்கு பதில் பயன்படுத்தலாம் பூண்டு ,சீரகம் உணவில் சேர்க்கலாம். . இதை முற்றிலுமாக தவிர்க்க சீரகத்தை அவித்து இரண்டு வேளைக்கு எடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.