உலக காசநோய் தினம் (World Tuberculosis Day) இன்று (மார்ச் 24) ஆகும். காசநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட ஒரு தொற்று நோயாகும்.
இதை எப்படி தடுப்பது, என்னென்ன காரணங்களால் உண்டாகிறது, அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
காசநோய் ஏன் உண்டாகிறது?
காற்றின் மூலம் பரவக்கூடிய கொடிய பாக்டீரியாக்களால் இந் காசநோய் தொற்று உருவாகிறது. இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சி விகிதம் மிக மெதுவாகவே இருக்கும்.
பாதிக்கப்பட்டவர் இருமும்போது தும்மும் போது வெளிப்படும் திரவங்களின் வழியாக வேகமாக பரவும்.
சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாத போது கிருமியின் பரவல் அதிகமாக இருக்கும்.
நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பது, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த காசநோய் பரவுகிறது.
ஒருவரிடமிருந்து மிக எளிதாக தும்மல், இருமலில் இருந்து வெளிப்படும் திரவங்களின் வாயிலாகப் பரவிவிடும்.
காசநோய் அறிகுறிகள்
காச நோய் ஆரம்பக் கட்டத்தில் நுரையீரலை மட்டும் பாதிக்கும். அதன்பின் நரம்பு மண்டலத்தை நோக்கி பரவும். அதுமட்டும் இல்லாமல் உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் நோய் உருவாகலாம்.
நெஞ்சு வலி, இருமும்போது சளியுடன் ரத்தம் வெளிவருதல், தொடர்ச்சியான இருமல் பிரச்சினை, போன்ற அறிகுறிகள் காணப்படும். இது தவிர அவ்வப்போது காய்ச்சல், சளி, பசியின்மை, இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்த்தல் உடல் சோர்வு, சரும நிறம் வெளிறுதல், திடீர் எடை குறைவு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
காசநோய் தடுப்பு முறை
காசநோயின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட உலக சுகாதார நிறுவனம் 1993ஆம் ஆண்டு அதை கட்டுப்படுத்துவதற்கான உலகளவிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், நோய் வந்தபின் அதற்கான தனிப்பட்ட சிகிச்சையோ மருந்தோ கிடையாது.
காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG தடுப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது.
காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்படுகிறது.