இப்போது அதிகளவில் சமையலறையில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் குளிர்சாதனப்பெட்டியை பயன்படுத்தியே மரக்கறி பழவகைகளை சேமித்து வருகின்றனர்.
இந்த முறை மிகவும் பிழையான முறையாக மருத்துவ துறை கூறுகின்றது .நாம் தக்காளி வெங்காயம், உருளைக்கிழங்கு ,சக்கரைகிழங்கு ,வற்றாளை கிழங்கு வகைகளையும் ,பூண்டு போன்றவற்றை வெளியில் உலர்ந்த இடத்தில் வைத்து சேமிப்பதே நன்மையை தரும்.
அதாவது நாட்டுமரக்கறி வகைகளை வெளியில் சேமிப்பு செய்வது அதன் தன்மை கெடாமல் காப்பாற்றும் .
மேலும் கரட் ,பீட்ரூட் ,முள்ளங்கி ,க்யுகம்பர் வகை போன்ற ஆங்கில மரக்கறிகளை மாத்திரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சேமிக்க வேண்டும் . அதனையும் மரக்கறிக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சேமித்து வைப்பது நல்லது கீரைப் பொருட்களை கண்ணாடி போத்தல் ஒன்றில் வைத்து சேமிக்க வேண்டும்.
வாழைப்பழம் ,கொய்யா , மாதுளைப்பழம் போன்றவற்றை வெளியில் வைத்து சேமிக்க வேண்டும் அப்பிள்பழம் வெளியில் ஏனையப் பழங்களுடன் சேமித்து வைக்கும் போது அப்பிள் பழத்தில் இருந்து எதலின் வாயு வெளியேறுகிறது எனவே இந்த வாயுவின் தாக்கம் ஏனைய பழங்களை பழுதடைய செய்யும் .
திராட்சை , ஸ்ரோபெரி பழங்களை அதிகபட்சம் அன்றே உண்டு முடித்தல் நல்லது வாட்டர் மெலன் போன்ற மெலன் வகை வெளியில் வைத்து உண்ண கூடாது . அதை அன்றே உண்டு முடித்தல் மிக சிறந்தது ஆகும்.