- முதலாவது ரூட்டின்
- ரெண்டாவது வேலை
- மூன்றாவது ரிலாக்ஸ்
ரூட்டினை பொறுத்தவரை ஒன்றும் அலட்டிக்கொள்ள தேவை இல்லை. அது அது அது பாட்டுக்கு நடக்கும். இதற்கு செலவாகும் நேரத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தினால் நமது நாளை பாதிக்கும்.
உறங்குவது, கண்விழித்ததும் பல் துலக்குவது கோபி குடிப்பது இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவது குளிப்பது மூன்று வேலை உணவுகள் போன்ற இவையெல்லாம் ரூட்டினை வகையில் சேரும்.
இரண்டாவது – வேலை நேரம். இதில் தான் அதிக கவனம் தேவை. அதிக நேரம் வீணாவது இங்கே தான்.
இதில் அலுவலக வேலைகளும் சேரும். பர்சனல் வேலைகளும் சேரும்.
உதாரணம் விமானத்துக்கு இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. என்ன செய்வோம் நாம்?
பக்கிங் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்ப்பது, பாஸ்போர்ட் எடுத்து வைப்பது, புதிய டிக்கெட்டை மேலாக எடுத்து வைப்பது, அலை பேசியை சார்ஜ் செய்வது, உடுத்த வேண்டிய உடைகளை எடுத்து வைப்பது வாடகை கார் புக்கிங் செய்வது எல்லாம் செய்து விட்டு பெற்றோருடன் அமைதியாக பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் வேலை நேரத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அர்த்தம்.
அந்த நேரத்தில் நெட்பிலிக்ஸ் பார்த்துவிட்டு டாக்சி வந்து அழைக்கும்போது பாஸ்போர்ட்டை தேடிக்கொண்டிருந்தால் சொதப்பிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
சின்ன ஒரு பேப்பரில் டு டூ லிஸ்ட் எழுத பழகி கொண்டால் வாழ்வின் மிகப்பெரிய தந்திரத்தை நீங்கள் பழகி கொண்டதாக அர்த்தம்.
மனதில் தோன்றிய அனைத்தையும் எழுதிக்கொண்டு இன்று இந்த வேலையை செய்யாவிட்டால் என் தலை போய்விடும் என்ற ஒரு வேலையை மட்டும் ஒரு சர்க்கிள் இட்டு முதலில் செய்ய துவங்குங்கள். அந்த வேலை செய்து முடித்தவுடன் கிடைக்கும் ஆசுவாசத்தை அனுபவியுங்கள்
மற்ற அனைத்தையும் பிறகு வரிசையாக செய்து கொள்ளலாம்.
மூன்றாவதாக உள்ளது ரிலாக்ஸ் டைம். இந்த நேரத்தில் தான் நம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவழிக்க வேண்டும் உடற்பயிற்சி செய்ய வெண்டும் புத்தங்கள் படிக்க வெண்டும் பீச் போகவேண்டும். நமக்கு என்னல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் இந்த நேரத்தில் தன் செய்ய வேண்டும்.
பல பேர் வேலை அதிகமா இருக்கு என்று ரிலாக்ஸ் நேரத்துக்கு நேரம் ஒதுக்க மாட்டார்கள். அது மெழுகுவர்த்தியை இரண்டு பக்கமும் எரிப்பதற்கு சமம்.
நீங்கள் வேலை செய்ய பிறக்க வில்லை. வாழ்வதற்காக பிறந்துள்ளீர்கள்
அதை உறுதி செய்வது ரிலாக்ஸ் நேரம் தான்
வேலை நேரத்தை மட்டும் டு டூ லிஸ்ட் வைத்து கட்டுப்படுத்தி கொண்டால் ரொட்டின் மற்றும் ரிலாக்ஸ் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.