குறுகிய கால இடைவெளிகளில் சிறிய அளவில் இலகுவில் சமிபாடடையக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
போசாக்குள்ள உணவுகளே ஓருடல் ஈருயிர் ஆக இருக்கும் கர்ப்பணித் தாய்மாருக்கு உகந்ததாகும்.
சமபோசாக்குள்ள உணவே எப்போதும் சிறந்தது. இது கருவுற்ற காலத்துக்கும் பொருந்தும்.
இதற்கு முன்னர் ஏதாவது உணவுகள், பழங்கள், விலங்கு உணவுகள் என்பன ஒத்துக்கொள்ளாமல் இருந்திருப்பின் அவற்றைக் கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்கவும். (கணவாய், இறால், தக்காளி)
அதே வேளை பப்பாசி, அன்னாசி போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றால் பாதிப்பு இல்லை என விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முருங்கை இலை எமது பகுதியில் கிடைக்கும் மலிவான கிருமி நாசினித் தொற்று இல்லாத இரும்புச் கீரையாகும். அதனைத் தினமும் உணவில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
இவற்றுடன் மேலதழகமாக இரும்புச்சத்துக் குளிசைகளை வைத்திய ஆலோசனைப்படி தவறாது எடுக்க வேண்டும்.
ஆதாரம் | தாயாகிய தனித்துவம்