வீட்டில் திடீர் என்று நோய்கள் ஏற்படும் போது பாட்டி வைத்தியம் செய்வது பழமையான ஒன்று
ஜலதோஷம்
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சி குடித்தால் இருமல் ,ஜலதோஷம் , தொண்டைக்கு கரகரப்பு போகும் .
சிறிது வாயுக் கோளாறு
மிளகை பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்ந்து தினமும் சுடு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி , தக்காளி , உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
சளி காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டி டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேலை வாய்கொப்பளித்து வந்ததால் வாய் நாற்றம் போகும் .