நீரிழிவு நோயால் ஏற்பட்ட கூடிய சரும பிரச்சனைகள்நீரிழிவு நோய் என்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை. நீரிழிவு தொடர்பான இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகள் உடலின் மற்ற உறுப்புகளை மட்டுமல்ல, நமது சருமத்தையும் எதிர்மறையாக பாதிக்கும் தன்மைக் கொண்டது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைமைகளில் உள்ள பெரும்பாலான மக்கள் சில தொடர்ச்சியான சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
நீரிழிவு நோயினால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் சீர்குலைந்துவிடும். இதன் விளைவாக, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு போதுமான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சரும திட்டுகளை பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
கழுத்து அல்லது அக்குள்களில் திட்டுகள் உருவாகலாம். சிலருக்கு வெளிறிய சருமமும் இருக்கும். “குறைவான இரத்த ஓட்டம் காரணமாக, உடலின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாதங்களில் அரிப்பு ஏற்படலாம்” என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் நீரிழிவு நோய் உங்கள் சருமத்தை உணர்திறன் உடையதாக ஆக்குகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வழக்கமான மருந்து, உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவுமுறை ஆகியவை பெரும்பாலான சரும பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும்.
உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அக்குள், மார்பகங்களின் கீழ், கால்விரல்களுக்கு இடையில் மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் ஏற்படாமல் உலர்ந்த நிலையில் இருக்குமாறு பராமரியுங்கள்.
மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும். வியர்வையைக் குறைக்க, வெப்பமான காலநிலையில் தினசரி இருமுறை குளிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
உங்கள் சருமத்தில் ஈர்ப்பதம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் வறண்டிருந்தால், உடல் முழுவதும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். ஏனெனில் வறட்சியின் காரணமாக ஒவ்வாமை எதிர்விளைவு பாதிப்புகள் ஏற்படலாம்.
உங்கள் கை, கால்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்