சுக்கின் மருத்துவ குணம். சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும். இதையே தொண்டை மீது பூசினால் தொண்டைக் கர கரப்பு, தாண்டைக்கட்டு, வலி ஆகியன குறைந்து விடும்.
சுக்குக் களிம்பை நெற்றிப் புருவங்களின் மேல் பூசி வைக்க கிட்டப் பார்வைக் கோளாறு குணமாகும். வெருகடி சுக்குப்பொடியை போதிய வெல்லம் சேர்த்து நீரிலிட்டு காபி போல காய்ச்சி வடிகட்டி பால் சேர்த்துக் குடித்துவர அஜீரணம் அகலும்.
அதிசாரம் என்கிற நீர்க்கழிச்சல் அடங்கும். சுக்குத்தூள் வெருகடி அளவு எடுத்து போதிய அளவு பசு நெய்யும் வெல்லமும் சேர்த்துக் குழைத்து அந்தி, சந்தி என இருவேளை சாப்பிட்டுவர நெஞ்சகச் சளி கரையும். இருமல் குணமாகும்.