வீட்டிலிருந்தே செய்ய கூடிய இயற்கை மருத்துவம் பல உள்ளன இது ஆதிகாலத்தில் இருந்தே முதியவர்கள் பயன் படுத்தி வருகின்ற ஒன்றாகும் சிலர் இவற்றை இப்போது பயன்படுத்துவதில்லை.
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் புண் இருக்கலாம்.இதற்கு தினமும் காலை மற்றும் மாலையிலும் தேங்காய் பாலுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும்.
தலைபாரமாக இருந்தால் கராம்பை நீர் விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்க தண்டிலும் படும் படி தடவ தலைப்பார நீரேற்றம் குணமாகும்.
சளித்தொல்லை நீங்க வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.சிறிய இஞ்சி துண்டில் உப்பு லேசாகத் தடவிநன்கு மெல்லலாம். கருமிளகு டி குடிக்கலாம் சூடான பாலில் மஞ்சள்தூள் சேர்த்து குடிக்கலாம்.
சளி இருமல் நீங்க கற்பூரவள்ளியின் 2 அல்லது 3 இலைகளை 150ml அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின் தேன் கலந்து அருந்தலாம்.