மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி? நீங்கள் மன அழுத்தத்திலிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸ் மற்றும் பக்டீரியா போன்ற நோய் கிருமிகளுக்கு கீழ் செயல்படும் இதனால் உங்களுக்கு அதன் வீரியம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் முதலில் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
மன அழுத்த நோய்க்கான அறிகுறிகள்
எப்போதும் சோகமாக இருத்தல் மதியம் மற்றும் பின்னேர வேளைகளில் இது சரி மாறலாம் வாழ்க்கை மேல் பிடிப்பு இன்மை . எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சியில்லாமை. சிறு விஷயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை. முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை. எப்போதும் உடல் சோர்வாக இருத்தல் மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல் பசியின்மை அதனால் உடல் எடை குறைதல் (மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்காலாம்)
தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்துவது
உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.’ நான் தன்னம்பிக்கைமிக்கவன்,நான் சக்தி மிக்கவன் நான் சாதனையாளன், நான் அன்பு மிக்கவன்மற்றும் என்னால் முடியும் முடியும் முடியும் வெற்றி நிச்சயம்.’ என உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு விளையாட்டு ஜெயித்துக் காட்டுவேன் என்று உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
திமிரு, பொறாமை,கோபம் மற்றும் வெறுப்பு போன்ற ஏல்லாவற்ரையும் மூட்டை கட்டி தூரம் போடுங்கள்.
ஒரே நாளில் எல்லாம் முடியாது சிறுக சிறுக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.