சுண்டக்காய் என்று சிலர் இதை பெரிதாக உண்ண விரும்புவதில்லை ஆனால் அத்தகைய சுண்டைக்காயில் அதி உன்னதமான மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
சுண்டைக்காயில் புரதம் ,கல்சியம் , இரும்புசத்து அதிகம் நிறைந்த்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது . இதை வாரம் இரு முறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும் உடற்சோர்வு நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் ,மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லிதத்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு ,மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து ,செரிமான சக்தியை தூண்டி உடலின் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும் மலக்கிருமிகள். மூலக்கிருமிகள் அகலும்.வயிற்றுப்புண் ஆறும் வயிற்றின் உடற் சுவர்கள் பலமடையும்.
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் உறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் இது மார்புச்சளியை சரி செய்யும்.