உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்ட, குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய உணவு என்றால், அது கோழி முட்டை தான்.
முட்டை என்பது உயர் தரமான புரதம், தேவையான கொழுப்புகள், உடலுக்கு அவசியமான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை கொண்டுள்ளது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். தசைகள், மூளை, கண்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட முட்டை பெரிதும் உதவுகிறது.
முட்டையில் கால்சியம், வைட்டமின் A, B1, B2 நியாசின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், செலினியம், ஓமேகா-3 போன்ற பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், சத்துக்குறைவால் ஏற்படும் உடல் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.