பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பில் கற்றாழையை அறிமுகப்படுத்துவது ஆரோக்கியமானது. ஆனால் குழந்தைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தையின் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் செய்யலாம் அல்லது கற்றாழை ஜெல் இலேசான தோல் எரிச்சலையும் உண்டு செய்யலாம். குழந்தைக்கு கற்றாழை ஜெல் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
கற்றாழை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கற்றாழையில் இருக்கும் நொதிகள் அழற்சியை குறைக்க செய்கிறது. கற்றாழை ஈரப்பதமாக்க செய்யும். ஆனால் இது குழந்தைக்கு ஏற்றதா என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் குழந்தைகளின் தோல் பெரியவர்களின் தோலை விட மென்மையானது. இது வேகமாக தோலில் ஊடுருவகூடியதால் சமயங்களில் தோல் எரிச்சலை உண்டு செய்யும். குழந்தையின் தோலின் உணர்திறன் தன்மையை கவனித்து கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
கற்றாழை ஜெல் எப்படி பயன்படுத்துவது?
கற்றாழை குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக கடைகளில் கிடைக்கும் எனினும் வீட்டிலேயே கற்றாழை இருந்தால் பாதுகாப்பாக அதை பயன்படுத்தலாம். கற்றாழை மடல்களை நீக்கி அதன் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை வெட்டி எடுத்து ஓடும் நீரில் நன்றாக அலசி பிறகு 5 முறை தண்ணீரில் அலசி மிக்ஸியில் அல்லது ப்ளெண்டரில் மசித்து எடுத்துகொள்ளவும். பிறகு சுத்தமான பாட்டிலில் சேர்த்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து தேவையான போது வெளியே வைத்து அறைவெப்பநிலைக்கு வந்ததும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கற்றாழையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
டயப்பர் சொறி வெடிப்புகளை தடுக்கும் கற்றாழை
குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்தும் போது டயப்பர் சொறி ஏற்படலாம். இந்த டயப்பர் சொறி குழந்தைகளுக்கு அதிக அவதியை உண்டு செய்யலாம். கற்றாழையில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் தொற்று எதிர்ப்பு திறன்கள் ஏராளமாக இருப்பதால், அது குழந்தையின் சருமத்தை அமைதிப்படுத்தி, ஆற்றும், கற்றாழை சொறியிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பதால் கற்றாழை ஜெல் டயப்பர் சொறி இருக்கும் இடங்களில் பயன்படுத்தலாம்.
குழந்தைக்கு அரிக்கும் தோலழற்சிக்கு கற்றாழை
குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்களில் எக்ஸிமா ஒன்று. இது குழந்தையின் சருமத்தில் சிவப்பு, அரிப்பு, புள்ளி உண்டு செய்கிறது. இது எரிச்சலையும் உண்டு செய்யும் இந்த எக்ஸிமாவுக்கு இயற்கை மருந்தாக கற்றாழை உதவும். சரும பாதிப்பு இருக்கும் இடங்களில் இதை தடவி சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மேம்படுத்துகிறது.
குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
கற்றாழை நீர்ச்சத்து கொண்டது. இது குழந்தையின் சருமத்தை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க செய்கிறது. கற்றாழை குளிர்விக்கும் தன்மையானது குழந்தையின் சருமத்தில் நச்சு பொருள்களுக்கும் தடையாக உள்ளது. மேலும் குழந்தையின் சருமத்தில் தடிப்புகள் பிற தோல் நோய்கள் தவிர்க்க முடியாதவை. கற்றழை ஜெல் இவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்க செய்கிறது.
குழந்தைகளுக்கு பூச்சி கடித்தால் முதலுதவி கற்றாழை
கற்றாழை குழந்தைகளுக்கு பூச்சி கடித்தல், சிறு காயங்கள், கீறல் வெட்டுக்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது கற்றாழை இந்த அசெளகரியங்களிலிருந்து காப்பாற்றும். கற்றாழை ஈரப்பதமூட்டும் குணங்கள் காயங்கள் உலராமல் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி குழந்தைக்கு நிவாரணம் அளிக்கிறது. இது புண்களை தடுக்கிறது. இதில் உள்ள மியூகோபாலிசாக்கரைடுகள், அமினோ அமிலங்கள், துத்தநாகம், நீர் போன்றவை ஈரப்பதம் அளித்து புண்களை குணப்படுத்துகின்றன.
குழந்தைக்கு ஷாம்புவாக கற்றாழை பயன்படுத்தலாமா?
கற்றாழை ஷாம்புவாக குழந்தைக்கும் பயன்படுத்தலாம். தரமான கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து குழந்தையின் உச்சந்தலையில் தடவி விடலாம். கற்றாழை குழந்தையின் உச்சந்தலையின் ph பிஹெச் சமநிலையை பராமரிக்கிறது. மேலும் குழந்தை வளரும் போது அவர்களது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
கற்றாழை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
கற்றாழை வீட்டில் தயாரிக்காமல் கடைகளில் வாங்கினால் சுத்தமான ஒன்றை தேர்வு செய்யவும்.
குழந்தைக்கு கற்றாழை பயன்படுத்துவதற்கு முன்பு அவர்கள் சருமத்தில் ஒவ்வாமை உண்டு செய்கிறதா என்பதை கவனிக்கவும்.
பாதகமான பக்கவிளைவுகள் இல்லை என்றால் வறண்ட சருமத்தில் மென்மையாக பயன்படுத்துங்கள். அதே நேரம் மிதமாக பயன்படுத்துவது நல்லது.
குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கற்றாழை பயன்படுத்த வேண்டாம்.
கற்றாழை குழந்தைக்கு பக்கவிளைவுகள் உண்டு செய்யுமா?
கற்றாழை சில குழந்தைகளுக்கு இலேசான தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டு செய்யலாம். குழந்தையின் சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
கற்றாழை பயன்படுத்தும் போது குழந்தையின் கண், வாய், மூக்கு பகுதியில் போடாமல் பயன்படுத்த வேண்டும்.
இறுதியாக
குழந்தைக்கு கற்றாழை பயன்படுத்தலாமா, எந்த மாதத்தில் இருந்து பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்துவது, கற்றாழை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன என்பதை பார்த்தோம். உங்கள் குழந்தைக்கு கற்றாழை பயன்படுத்துவதற்கும் முன்பு மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.