கடந்த வார இறுதியில் மேற்கு லண்டனில் நடைபெற்ற “இலண்டன் தமிழர் சந்தை” ஏப்பிரல் 11ம் 12ம் திகதிகளில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனமும் நாச்சியார் இவன்ஸ் நிறுவனமும் இணைந்து இவ் மாபெரும் “இலண்டன் தமிழர் சந்தை” யை நடாத்தியிருந்தனர்.
லண்டனில் முதன் முறையாக நடைபெற்ற இந்த வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 130 வர்த்தக நிறுவனங்களும் 6000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பல முன்னணி தமிழ் வர்த்தக நிறுவனங்கள் கலந்து சிறப்பித்தன.
இவ் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வினை சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு திருவிழாவாக நடாத்தியமை மக்களை உற்சாகமாக கலந்து கொள்ள வைத்தது.