தாயகக் கனவுகளையும் உணர்வுகளையும் தாங்கிவரும் நோக்குடன் பல வருடங்களுக்கு முன் லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட IBC தமிழ் வானொலி நேற்றுமுதல் ஒளி வடிவம் பெற்று புதிய தொலைக்காட்சியாகவும் இயங்க ஆரம்பித்துள்ளது.
காலத்துக்குக் காலம் பல்வேறு உணர்வாளர்களாலும் கட்டி வளர்த்த இந்த ஊடகம் இன்று புதுப்பொலிவு காண்பது புலம்பெயர் தேசத்தில் ஈழத்தவர்களின் கட்டுமான வளர்ச்சியில் பல பதிவுகளை தனதாக்கிக்கொள்ளும் எனக்கூறலாம்.
நேற்று மாலை மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் முத்த ஒலி ஒளி பரப்புத்துறை கலைஞர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது சிறப்பான அம்சமாகக் காணப்பட்டது.
IBC வானொலி மற்றும் தொலைக்காட்சி தலைவரும் லிபாரா நிறுவனப் பணிப்பாளருமான கந்தையா பாஸ்கரன் கருத்துத் தெரிவிக்கையில் ஈழத்தமிழருக்கான தனித்துவமான ஊடகமாக IBC தமிழ் இனி இயங்கும் எனக்குறிப்பிட்டார்.
படங்கள் | ஈழம் ரஞ்சன்