இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நுவெரேலியா மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிகெட் சுற்றுப்போட்டி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ம் 12ம் 13ம் திகதிகளில் கொட்டக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நுவெரேலியா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 விளையாட்டுக் கழகங்கள் இப்போட்டியில் மோதிக்கொண்டன. வெற்றிபெற்ற கழகங்களுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர்களான திரு சக்திவேல் மற்றும் திரு பிலிப்குமார் வெற்றிக் கேடையங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்கள்.
முதலாவது பரிசாக ரூபா 25,000 ற்கான அனுசரணையை லண்டன் நோர்த்வூட் நமஸ்தே லாஞ்ச(Namaste Lounge) வழங்கியிருந்தது. இரண்டாம் பரிசான ரூபா 15,000 ற்கான அனுசரணையை லண்டனைத் தளமாகக் கொண்ட வணக்கம் லண்டன் இணையத்தளம் (www.vanakkamlondon.com) வழங்கியிருந்தது.
இப்போட்டிகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணி இணைப்பாளரும் நுவெரேலியா மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளனத்தின் பொருளாளருமான இராஜாமணி பிரசாந்த் ஒழுங்கமைத்திருந்தார்.