இன்று உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
திருமலையில் தமிழ் சிவில் சமுகம் இந்நிகழ்வினை மலை 5 மணிக்கு ஒழுங்கு செய்துள்ளது.
தமிழர் தாயகமெங்கும் மக்கள் துன்ப நினைவுகளுடனும் உணர்வுடனும் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டனில் மாலை முள்ளிவாய்க்கால் நினைவு நடைபெற இருக்கின்றது.