வணக்கம் லண்டன் இணையம் தனது இரண்டாம் ஆண்டை இன்று நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இவ் இணையம், லண்டனில் நடைபெறும் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்வதையும் தமிழரின் ஆற்றலை வெளிகொண்டு வருவதையும் பிரதான நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினத்தில் இவ் இணையத்துக்கு ஆதரவு வழங்கிய எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இணைய பார்வையாளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் உங்கள் வலிமையான ஆதரவினையும் வேண்டி நிற்கின்றது.