எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி பரந்தன் இந்து மகாவித்தியாலயம் தனது 60 ஆண்டு நிறைவையொட்டி வைர விழா கொண்டாட இருக்கின்றது.
1954 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலை கடந்த ஆண்டு 60 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி பாடசாலையின் வாசலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு வருகின்றது. பழைய மாணவர்களின் பங்களிப்பில் உருவாகும் இவ் வைர விழா வளைவு வேலைகள் முடிவுறும் நிலையில் உள்ளது.
பழைய மாணவரின் பங்களிப்புடன் வைரவிழா மலரினை பாடசாலை வெளியிட உள்ளது. பாடசாலை மற்றும் குமரபுரம் பரந்தன் கிராமங்களின் வரலாற்றுப் பதிவுகளுடன் இவ்மலர் வெளிவர உள்ளது.
பரந்தன் இந்து அன்னையின் வைர விழா காண அனைத்து பழைய மாணவர்களையும் ஜூலை முதலாம் திகதி பாடசாலை வருமாறு பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர் பிரசன்னா பரமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.