நாளை பரந்தன் இந்து மகாவித்தியாலயம் தனது 60 ஆண்டு நிறைவையொட்டி வைர விழாவினை பெருமையுடன் கொண்டாடுகின்றது.
கடந்த 60 வருடங்களாக வளர்ச்சிகண்ட இப்பாடசாலை தனது வாழ்வில் பல சவால்களை கண்டு இன்று வைர விழாவினை காணுகின்றது.
பாடசாலை வளாகம் தற்போது கலகலப்புடன் ஆயத்தவேலைகளை கவனித்த வண்ணம் உள்ளது. பரந்தன், குமரபுரம் கிராம மக்கள் பாடசாலை வளாகத்தில் கூடியுள்ளனர்.
மலரும் நினைவுகளுடன் பழையமாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்துள்ளனர்.
பரந்தன் இந்து அன்னையின் வைரவிழா காண வருமாறு அனைவரையும் பாடசாலை சமூகம் அழைத்து நிற்கின்றது.