இன்று மாலை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு சி வி விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதம அத்திதியாக கலந்துகொண்டு பேருரை நிகழ்த்தியிருந்தார்.
முதலமைச்சராக கடமையேற்ற பின் முதன் முதலாக லண்டன் வந்திருந்த முதல்வர் புலம்பெயர் மக்களை சந்தித்ததுடன் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டார்.
இன்றைய நிகழ்வில் உரையாற்றிய முதல்வர். கறுப்பு ஜூலை நடந்து இன்றுடன் 32 வருடங்கள் சென்றுள்ளது. புலம்பெயர் இளம் சமுகம் தாயக இளம் சமூகத்துடன் இணைந்து தாய்நாட்டை மேம்படுத்தவேண்டும். இன அழிப்பு என்ற சொல்லாடலை நான் பயன்படுத்த முன்னர் தந்தை செல்வா பாவித்திருந்தார். உண்மைக்கு முரணாக இனஅழிப்பு நடந்துள்ளது என்ற எமது நிலைப்பாட்டில் இருந்து நாம் பின்வாங்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் உண்டு என்பதை நான் உறுதிபட தெரிவித்துள்ளேன். அதுவும் இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது சொல்லியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வினை முன்னிட்டு பல கலை நிகச்சிகளும் நடைபெற்றன.