வட கொரிய மற்றும் தென் கொரிய நாடுகளின் அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு வடகொரிய தலைநகரில் பிரத்தியோக இடத்தில் நடைபெற்றுவருகிறது.
இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி, அவரது துணைவியாருடன் இன்று காலை மூன்று நாட்கள் விஜயமாக வடகொரியா சென்றுள்ளார்.
பியோங்யாங் விமான நிலையத்தில் வைத்து வடகொரிய தலைவர் கிம் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜு ஆகியோர் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, இந்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகளுடன் வடகொரியத் தலைவர் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
அத்துடன் வடகொரியாவின் அணுவாயுத வேலைத்திட்டங்களையும் இடைநிறுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே தென்கொரிய ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தென்கொரியா மத்தியஸ்த்த தரப்பாக செயற்பட்டு வருகிறது.