பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவிவருகின்ற சிக்கலான நிலையில், பாராளுமன்றத்திற் ஜனாதிபதி கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பல நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி வருகின்றன.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதரவை திரட்டிக்கொள்வதில் மைத்திரி மஹிந்த கூட்டணி தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வந்தது. இதன் காரணமாகவே மைத்திரி பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி பரவலாகி வந்த நிலையில், உலக நாடுகள் பல நேரடியாக ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.