சீனாவின் மத்திய பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் குனன் மாநிலம் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிலேயே தீப்பற்றியுள்ளது.
குறித்த பஸ்ஸில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள், சாரதிகள், 53 சுற்றுலாப்பயணிகள் என 56 பேர் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளத்துடன்,ஏனையவர்களும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.