கென்யாவைச் சேர்ந்த விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார்.
கென்யாவின் கஷ்டப்பிரதேச ஆசிரியரான பீட்டர் என்பவருக்கே இந்த விருது கிடைத்துள்ளது. அத்தோடு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை 5வது முறையாக துபாயில் நடைபெற்றது. இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார்.
மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.
கென்யாவில் மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளிலும் விஞ்ஞான துறையை வளர்ப்பதே தமது கனவென ஆசிரியர் பீட்டர் தெரிவித்துள்ளார்.