நாடாளுமன்றத் தேர்தலின் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தினை ஆதரித்து முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
சென்ற தேர்தலின் போது புதிய இந்தியா பிறக்கும் என்றார் மோடி. அந்த இந்தியா பிறக்கவே இல்லை. ஜி.எஸ்.டி அமலால் பத்து கோடி பேருக்கும் மேல் வேலைகளை இழந்துள்ளனர். நூறு நாட்களில் கறுப்புப்பணத்தை ஒழிப்பேன்.
இல்லை என்றால் என்னை தூக்கில் கூட போடுங்கள் என்றார். பண மதிப்பிழப்பு என்று மக்கள் துயருற்றது மட்டுமே மிச்சம். மோடி தன்னை நாட்டின் காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். காவலாளி அல்ல கோமாளி.
இந்தத் தேர்தலின் ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கையே. ஒரு படத்தில் ஹீரோ என்று இருந்தால் வில்லன் இருப்பார். அவர் தான் மோடி. வில்லன் இருந்தால் கைத்தடிகள் இருப்பார்கள்.
அவர்கள் தான் இ. பி. எஸ், ஓ.பி.எஸ். விவசாயக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, கேஸ் விலையினை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போலவே மானியத்துடன் கேஸ் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி இந்த ஆட்சி, பொள்ளாச்சி பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை போல் தன் வீட்டில் நடந்தால் சும்மா இருப்பாரா சபாநாயக பொள்ளாச்சி ஜெயராமன். பேராசிரியர் நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குகிறார்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதுகாப்பில்லாத ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.