பெரு தலைநகர் லிமாவில் இரண்டு தட்டு பஸ் ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக, தீயணைப்புப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளது.
பஸ்ஸில் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் தீப்பிடித்த நிறுத்துமிடத்துக்கு, சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்றுக்கு அருகிலிருக்கும் காரணத்தால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டதாக, லிமா மேயர் ஜோர்ஜ் முனோஸ் தெரிவித்துள்ளார்.