இங்கிலாந்தில் நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளமையானது பலரினதும் கவனத்தையீர்த்துள்ளது.
இங்கிலாந்தின் நோபேக்கிலுள்ள (Norfolk) கொங்ஹம் (Congham) கிராமத்தில் 1960ஆம் ஆண்டு முதல் நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் பங்குபெறும் நத்தைகளை வீட்டிலிருந்து கொண்டுவரலாம் அல்லது போட்டி நடக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தநிலையில் இந்தாண்டு நடைபெற்ற நத்தைகளுக்கான போட்டியில் 200 இற்கும் மேற்பட்ட நத்தைகள் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் 2 நிமிடம் 38 வினாடிகளில் போட்டித்தூரத்தை கடந்து ஆங்கில ஆசிரியர் ஒருவரின் நத்தையான ‘Sammy’ முதல் இடத்தைப் பிடித்தது.