செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை – உலகை உலுக்கும் புகைப்படம்

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை – உலகை உலுக்கும் புகைப்படம்

3 minutes read

மிகப் பெரிய உருவம், கம்பீரமான தோற்றம் கொண்ட ஒரு யானை அதற்கு நேர்மறையாக இருக்கும் புகைப்படம் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Elephant Tikiiri

Elephant Tikiiri ( FB /@Save Elephant Foundation )

மனிதர்கள் சூழ் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறவேண்டும்.

Elephant
Elephant

காடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டை போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை விடுத்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மனதை உலுக்கும் இந்தப் படத்தின் கதை கொடூரத்தின் உச்சம்.

’இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று இரவுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.

Elephant Tikiiri
Elephant Tikiiri
FB /@Save Elephant Foundation

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

2 நாள்களாக நகர முடியாமல் தவித்த பெண் யானை! – உயிரிழந்த சோகம்

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.

Elephant Tikiiri
Elephant Tikiiri
FB /@Save Elephant Foundation

விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும். டிக்கிரியின் புகைப்படம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தால் நம்மால் அவற்றுக்கு எப்போதும் அமைதியான வாழ்வைத் தர முடியாது. அன்பு செய்வது, எந்தத் தீங்கும் செய்யாதது மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது போன்றவை புத்தரின் வழி. அதைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More