திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இவரும்,, நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போதும், யூடுயூப்பில் இவரது பேச்சுகள் வெளியாகி எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது.
தன்னுடைய கட்டளையைக் கேட்டுத்தான் சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்று பேசி நாட்டையே அதிர வைத்தார் ஒருமுறை. அதேபோல், மேட்டூர் அணையின் நீருக்குள் இருந்த பழமையான சிவலிங்கம் தன்னிடம் உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். அந்தக் கோவிலை முன் ஜென்மத்தில் தான் தான் கட்டியதாகவும் தெரிவித்தார்.
இந் இந்லையில் பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்தியானந்தா திருடி வைத்துள்ளதாக, கொளத்தூர் காவல்துறையில் சிலர் புகார் மனு அளித்துள்ளனர்.